என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கற்பழிப்பு வழக்கு"
- விஷயத்தை மூடிமறைக்க, நகைக்கடைக்காரர் அவளிடம் பணத்தை கொடுத்துள்ளார்.
- விவகாரம் குறித்து நாங்கள் முழுமையான விசாரணை நடத்தி வருகிறோம் என்று அதிகாரி கூறினார்.
ரூ.15 ஆயிரம் பணத்தை திருடியதாக தனது வீட்டில் வேலை செய்த பெண்ணின் மீது புகார் நகைக்கடைக்காரர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட பெண் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நகைக்கடைக்காரர் வீட்டில் பணிபுரிந்து வருகிறார். வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்தி நகைக்கடைக்காரர் அப்பெண்ணிடம் முதலில் தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
ஜூன் மாதத்திற்கு பிறகு நகைக்கடைக்காரரர் அப்பெண்ணிடம் விரும்புவதாகவும் கூறி அவரை பலமுறை கட்டாயப்படுத்தி கற்பழித்துள்ளார். நாளுக்குநாள் நகைக்கடைக்காரரின் தொல்லை அதிகரிக்கவே, இதுகுறித்து அவரது மனைவியிடம் தெரிவிக்க பணிப்பெண் முடிவு செய்துள்ளார். இருப்பினும் நகைக்கடைக்காரர் இதுகுறித்து வெளியே கூறினால் கணவரையும், குழந்தையையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.
கடந்த ஜூலை 18-ந்தேதி, நகைக்கடைக்காரர் தனது மனைவி வீட்டை விட்டு வெளியேறிய பிறகு மீண்டும் அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த விஷயத்தை மூடிமறைக்க, நகைக்கடைக்காரர் அவளிடம் பணத்தை கொடுத்துள்ளார். இருப்பினும் அப்பெண் வாங்க மறுத்துவிட்டாள்.
இதைதொடர்ந்து, நகைக்கடைக்காரர் அப்பெண் மீது பணத்தை திருடியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து போலீசார் அப்பெண்ணை கைது செய்து விசாரித்தபோது, முதலில் பணத்தை திருடியதாக ஒப்புக்கொண்ட அப்பெண், பிறகு மனமுடைந்து அழுது நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவித்தார். இதை தொடர்ந்து போலீசார் நகைக்கடைக்காரர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
நகைக்கடைக்காரர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளான கற்பழிப்பு, தாக்குதல் மற்றும் கிரிமினல் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர் காவல்துறை அதிகாரி உறுதிப்படுத்தினார்.
மேலும் "குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கை நடைபெற்று வருகிறது, மேலும் இந்த விவகாரம் குறித்து நாங்கள் முழுமையான விசாரணை நடத்தி வருகிறோம்" என்று அதிகாரி கூறினார்.
- முதலில் அந்த பெண்ணை யாரென்று தெரியாது என கூறிய டேனி, பின்னர் இளம்பெண்ணின் சம்மதத்துடனேயே பாலியல் உறவு நடந்தது என கூறினார்.
- பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு டேனி இழப்பீடாக ரூ.1.34 கோடி வழங்க வேண்டும் என்றும் 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோர்ட்டில், அரசு வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.
பார்சிலோனா:
பிரேசில் அணியின் முன்னாள் கால்பந்து வீரர் டேனி ஆல்விஸ் (வயது 40). பார்சிலோனா அணியில் விளையாடி 3 சாம்பியன்ஸ் லீக் மற்றும் பிரேசில் அணியில் விளையாடி 2 கோபா அமெரிக்கா கோப்பைகள் உள்பட 42 கோப்பைகளை அவர் வென்றிருக்கிறார். 2022-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியின்போது, பிரேசிலுக்காக விளையாடிய வயது முதிர்ந்த வீரராக அறியப்பட்டவர்.
இவருக்கு எதிராக இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் ஒன்றை அளித்திருக்கிறார். கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி பார்சிலோனாவில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இருந்தபோது, கழிவறையில் வைத்து கட்டாயப்படுத்தி இளம்பெண்ணை அவர் பலாத்காரம் செய்துள்ளார்.
கத்தாரில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் பிரேசிலுக்காக விளையாடிய பின்னர் விடுமுறையை கழிக்க அவர் பார்சிலோனாவுக்கு சென்றிருக்கிறார்.
அப்போது, இளம்பெண் மற்றும் அவருடைய நண்பருக்கு மதுபானம் வழங்கிய டேனி, பின்னர் வேறொரு இடத்திற்கு இளம்பெண்ணை அழைத்து சென்றிருக்கிறார்.
இதுபற்றிய தொலைக்காட்சி பேட்டி ஒன்றின்போது, முதலில் அந்த பெண்ணை யாரென்று தெரியாது என கூறிய டேனி, பின்னர் இளம்பெண்ணின் சம்மதத்துடனேயே பாலியல் உறவு நடந்தது என கூறினார்.
இந்த வழக்கின்போது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு டேனி இழப்பீடாக ரூ.1.34 கோடி வழங்க வேண்டும் என்றும் 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோர்ட்டில், அரசு வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.
ஸ்பெயினில் குற்ற செயலை ஒப்பு கொண்டால் குறைந்த அளவிலான தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனினும், அதுபோன்ற ஒப்பந்தத்திற்கு அந்த இளம்பெண் முன்வரவில்லை என்று அவருடைய வழக்கறிஞர் கடந்த நவம்பரில் கூறினார். ஆனால், பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்றும் அந்த இளம்பெண் கூறியிருக்கிறார்.
இந்த வழக்கு வருகிற திங்கட் கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கில் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரியில் கைது செய்யப்பட்ட டேனி, அதுமுதல் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
- போலீஸ் விசாரணைக்கு பயந்து மாணிக்கம் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
- வழக்கை விசாரிக்க நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 52). விவசாயி. இவரது மனைவி சிவகாமி. தம்பதியினருக்கு 2 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர்.
மாணிக்கம் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை மாணிக்கம் புத்துகோவில் அருகே உள்ள பெத்த கல்லுப்பள்ளி ரெயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மாணிக்கம் மற்றும் அவரது நண்பர் கோவிந்தன்(85) ஆகியோர் சேர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கடந்த 4-ந்தேதி வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து போலீஸ் விசாரணைக்கு பயந்து மாணிக்கம் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதை தொடர்ந்து வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆகியோர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.
அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தவறிய அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தியை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கை விசாரிக்க நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் வழக்கில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன்(85) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கார்த்திகாயினியை சமரச பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரமேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.
- வழக்குப்பதிவு செய்த போலீசார் ரமேசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருச்சி:
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகேயுள்ள வடக்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இவர் ராமநாபுரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதற்கிடையே இவர் வரன் தேடி திருமண தகவல் மையத்தில் தனது பெயர், விபரங்களுடன் பதிவு செய்து வைத்திருந்தார்.
இந்நிலையில் அந்த தகவல் மையம் மூலம் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த கார்த்திகாயினி (36) என்பவர் பேராசிரியர் ரமேசுக்கு அறிமுகமானார். தொடர்ந்து செல்போன் எண்களை பகிர்ந்து கொண்ட இருவரும் மனம் விட்டு பேசியுள்ளனர். திருமணம் செய்துகொள்ளவும் முடிவெடுத்து இருந்ததாக கூறப்படுகிறது. அதனை காரணமாக கொண்டு ரமேஷ், கார்த்திகாயினி இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.
இதற்கிடையே அவர்களுக்குள் திடீரென்று மனக்கசப்பு ஏற்பட்டு கருத்து வேறுபாடு உருவானது. ஒருவருக்கொருவர் வசை பாடிக்கொண்டதோடு கார்த்திகாயினி சென்னையில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் பேராசிரியர் ரமேஷ் தன்னை கற்பழித்துவிட்டதாகவும், தாக்கியதாகவும் கூறியிருந்தார். அந்த வழக்கில் பேராசிரியர் ரமேஷ் தற்போது ஜாமீனில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கார்த்திகாயினியை சமரச பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரமேஷ் அழைப்பு விடுத்துள்ளார். அதனை ஏற்றுக்கொண்ட அவரும், தனது உறவினர்கள் சிலருடன் திருவெறும்பூர் காட்டூருக்கு வந்துள்ளார். அப்போது மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் பேராசிரியர் ரமேஷ் தன்னை தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக திருவெறும்பூர் போலீசில் கார்த்திகாயினி புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரமேசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கற்பழிப்பு வழக்கில் ஜாமீனில் இருந்த அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீண்டும் கைதாகி இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சுபாஷ் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார்.
- தனிப்படை போலீசார் சுபாசை கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
சேலம்:
கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 38). இவரும் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தனர். இந்நிலையில் அந்த மாணவி கடந்த 2008-ம் ஆண்டு மேல் படிப்பிற்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார்.
சுபாசும் காதலை தொடர்வதற்காக அங்கு வந்து தங்கி உள்ளார். அப்போது காதலர்கள் இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். இந்த நிலையில் சுபாஷ் ஆசைவார்த்தை கூறி அந்த மாணவியை கற்பழித்தார். இதனால் மாணவி கடந்த 2008-ம் ஆண்டு கர்ப்பம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆட்டையாம்பட்டி போலீ சார் சுபாசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சுபாஷ் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து கடந்து 2013-ம் ஆண்டு சேலம் கோர்ட்டு சுபாஷிற்கு பிடிவாரண்டு பிறப்பித்தது.
பின்னர் தனிப்படை போலீசார் சுபாசை கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் கேரளாவில் பதுங்கி இருந்த சுபாசை நேற்று போலீசார் கைது செய்தனர்.
- சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருநங்கை சச்சு சாம்சனை கைது செய்தனர்.
- வழக்கு திருவனந்தபுரம் விரைவு கோர்ட்டில் நடந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த சிறயின்கீழ் பகுதியை சேர்ந்தவர் சச்சு சாம்சன் (வயது 34). திருநங்கை.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ரெயில் பயணத்தின் போது ஏற்பட்ட இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமானது. இதையடுத்து சிறுவனை சச்சு சாம்சன் திருவனந்தபுரம் தம்பானூர் பகுதிக்கு அழைத்து சென்றார்.
அங்கு சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதன்பின்பு சச்சுசாம்சனை சந்திக்க சிறுவன் மறுத்தான். இதனால் அவர் செல்போன் மூலம் சிறுவனை தன்னுடன் வருமாறு அழைத்தார்.
இதனால் பயந்து போன சிறுவன் இதுபற்றி பெற்றோரிடம் கூறினான். அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து திருநங்கை சச்சு சாம்சனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருவனந்தபுரம் விரைவு கோர்ட்டில் நடந்தது.
வழக்கை விசாரித்த விரைவு கோர்ட்டு திருநங்கை சச்சு சாம்சனுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
மேலும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்டாவிட்டால் கூடுதலாக ஒரு ஆண்டு தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
திருநங்கை ஒருவருக்கு கற்பழிப்பு வழக்கில் கோர்ட்டு தண்டனை விதித்திருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
- உடந்தையாக இருந்த தந்தையும் சிக்கினார்
- திருமணத்தில் பங்கேற்றவர்களிடமும் விசாரிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி:
களியக்காவிளையை அடுத்த நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் அல் அமீர் (வயது 23).
இவர் அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டதை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த நிலையில் அல் அமீர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பின்பு அவர் தன்மீது வழக்கு தொடர்ந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து சமரசம் பேசியுள்ளார்.
அப்போது மாணவியை அவரே திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதையடுத்து அல்அமீருக்கும், மாண விக்கும் கடந்த 18-ந் தேதி திருமணம் நடந்துள்ளது.
மைனர் பெண்ணை அல்அமீர் திருமணம் செய்த தகவல் குழந்தைகள் நல அலுவலர்களுக்கு தெரியவந்தது.அவர்கள் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மைனர் பெண்ணை திருமணம் செய்ததாக அல்அமீரை கைது செய்தனர்.மேலும் இதற்கு உடந்தையாக இருந்ததாக சிறுமியின் தந்தை மற்றும் திருமணத்தை நடத்தி வைத்தவர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த திருமணத்தில் பங்கேற்றவர்களிடமும் சம்பவம் குறித்து விசாரிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- மனுதாரர் தனது முன்னாள் மனைவிக்கு ரூ.4.5 லட்சம் அபராதம் செலுத்தவேண்டும் என்று உத்தரவு.
- காவல்துறை மற்றும் நீதித்துறையின் நேரத்தை வீணடித்துவிட்டதாக நீதிபதி காட்டம்
புதுடெல்லி:
கற்பழிப்பு வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் வித்தியாசமான நிபந்தனையை விதித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண், தன் முன்னாள் கணவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பின்தொடர்ந்ததாகவும், மிரட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, அந்த நபர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், பாலியல் பலாத்கார எப்ஐஆரை ரத்து செய்யவேண்டுமானால், இரண்டு அனாதை இல்லங்களுக்கு குறைந்தது 100 குழந்தைகளுக்கு "சுகாதாரமான மற்றும் நல்ல தரமான பர்கர்களை" வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், மனுதாரர் தனது முன்னாள் மனைவிக்கு ரூ.4.5 லட்சம் அபராதம் செலுத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டது.
கருத்து வேறுபாடு காரணமாக கணவன்- மனைவி இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவு செய்து, இரு தரப்பினரும் ஜூலை 4 ஆம் தேதி டெல்லியில் உள்ள சாகேத் கோர்ட்டில் உள்ள சமரச மையத்தில் வழக்கைத் தீர்த்து, உயர் நீதிமன்றத்தில் இதனை தெரிவித்தனர். எஃப்ஐஆர் ரத்து செய்யப்பட்டால் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று முன்னாள் மனைவி கூறியதாக தெரிகிறது.
2020-ம் ஆண்டு முதல் இந்த வழக்கு நடந்து வருவதாக குறிப்பிட்ட நீதிபதி, முக்கியமான விஷயங்களுக்கு பயன்படுத்தக்கூடிய காவல்துறை மற்றும் நீதித்துறையின் நேரத்தை வீணடித்துவிட்டதாக கூறியதுடன், மனுதாரர் சமூகத்திற்கு நன்மைகளை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மேல் நிலைப்பள்ளி அருகே இட்லி கடை நடத்தி வந்தவர் தனலட்சுமி (வயது 40).
கடந்த 2014-ம் ஆண்டு அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவி தனலட்சுமியின் இட்லி கடைக்கு அடிக்கடி சென்று இட்லி வாங்கி சென்றார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து தனலட்சுமி அந்த மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார். இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் பள்ளியிலும், உறவினர்களிடம் தெரிவித்து விடுவதாக கூறி மிரட்டினார்.
மேலும் நெல்லிக்குப்பம் திருகண்டேஸ்வரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருடன் பல்வேறு பகுதிகளுக்கு மாணவியை அனுப்பி வைத்தார். தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதால் அந்த மாணவி கதறி அழுதார். அப்போது வேறு ஒரு மாணவியை என்னிடம் அழைத்து வந்தால் உன்னை விட்டு விடுகிறேன் என்று தனலட்சுமி கூறினார்.
அதை நம்பி அந்த மாணவி தன் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மற்றொரு மாணவியை தனலட்சுமியின் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அந்த மாணவியை அறையில் அடைத்து வைத்து 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
மேலும் 2 மாணவிகளையும் திட்டக்குடியை சேர்ந்த மதபோதகர் அருள்தாஸ் என்பவரது வீட்டுக்கு தனலட்சுமி அனுப்பி வைத்தார். அவர் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் தனலட்சுமி 2 மாணவிகளையும் விருத்தாசலம், வடலூர், பண்ருட்டி, உளுந்தூர்பேட்டை, சேலம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த விபசார கும்பலிடம் விற்றார்.
அந்த கும்பலிடம் சிக்கிய 2 மாணவிகளும் தப்பி திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் 5.8.2014 அன்று தஞ்சம் அடைந்தனர். அப்போது அவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து கண்ணீர் விட்டு கதறி அழுதபடி கூறினர்.
இதையொட்டி மதபோதகர் அருள்தாஸ் உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் 17 பேர் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். மீதி உள்ள சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.
அதனைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டதால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று 14 வயது மாணவியின் உறவினர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
அதனை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு 4.7.2016 அன்று இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அதன்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லாவண்யா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தீபா துரித விசாரணை நடத்தி கடலூர் மகளிர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் கடந்த 4-ந் தேதி நடந்தது. மாணவிகளை பாலியலில் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகர் அருள்தாஸ் உள்பட 16 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.
1) கலா (48), விருத்தாசலம்.
2) தனலட்சுமி, திட்டக்குடி.
3) ஸ்ரீதர் (23), ஊ.மங்கலம், காட்டுக்கூனங்குறிச்சி.
4) பாத்திமா (35), வளவனூர்.
5) ராதா (35), நெல்லிக்குப்பம், சுல்தான்பேட்டை.
6) ஷர்மிளாபேகம் (34), விருத்தாசலம்.
7) கவிதா (34), வடலூர்.
8) அன்பழகன் (28), சேலம், அயோத்தியாபட்டினம்.
9) அமுதா (28), சேலம்.
10) மோகன் (28), திட்டக்குடி.
11) மதிவாணன் (23), திட்டக்குடி.
12) அன்பு, விருத்தாசலம்.
13) ஆனந்தராஜ், நெல்லிக்குப்பம் அருகே உள்ள திருக்கண்டேஸ்வரம்.
14) பாலசுப்பிரமணியன் (42), புதுப்பேட்டை, விருத்தாசலம்.
15) ராதிகா (30), பண்ருட்டி.
16) மதபோதகர் அருள்தாஸ், திட்டக்குடி.
பண்ருட்டியை சேர்ந்த மகாலட்சுமி மீது போதிய ஆதாரம் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார். குற்றவாளிகள் அனைவருக்கும் இன்று (திங்கட்கிழமை) தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வ பிரியா ஆஜராகி வாதாடினார்.
ஆனந்தராஜ், பாலசுப்பிரமணியனுக்கு 4 ஆயுள் தண்டனையும், கலா, தனலட்சுமி, ஸ்ரீதர், பாத்திமா ஆகியோருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனையும் விதித்த நீதிபதி லிங்கேஸ்வரன் மேலும் தண்டனை விபரங்களை தொடர்ந்து வாசித்து வருகிறார். #CuddaloreStudents #CuddaloreCourt
பா.ஜனதா மகளிர் அணியினரும் 24 மணி நேரத்தில் மந்திரி பிரதீப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதல்-மந்திரிக்கு இறுதி கெடு விதித்தனர். மந்திரியை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியும் நடத்தினார்கள். 24 மணி நேரத்தில் அவர் ராஜினாமா செய்யவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். #Congress #BJP #PradeepMaharathy
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்